அனிதா முதல் ஏஞ்சலின் வரை.. 5வது மரணம்.. தொடர் உயிர்பலி கேட்கும் நீட் கொடூரன்!

சென்னை: நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அடுத்த உயிர் பறிபோய் உள்ளது. தமிழகத்தில் இதோடு ஐந்தாவது உயிர் இதனால் பறி போகிறது. தமிழகத்தில் நீட்டிற்கு எதிரான குரல்கள் தொடர்ந்து வலுவாக ஒலித்து வருகிறது. ஆனாலும் நீட் தேர்வுக்கு ஒரு முடிவு வந்தபாடில்லை. இந்த நிலையில்தான் இன்று சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சென்னையில் சோலையூரை சேர்ந்தவர்.

நீட் அனிதா நீட் தேர்வால் முதலில் தற்கொலை செய்து கொண்டது அனிதாதான். அரியலூரை சேர்ந்த இந்த மாணவி, கடந்த செப்டம்பர் 1ம் தேதி 2017ல் மரணம் அடைந்தார். அவர் இறந்து ஒருவருடம் ஆகிவிட்டது. இவரும் நீட் தேர்வில் வெற்றிபெற முடியாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுபஸ்ரீ தற்கொலை இந்த தற்கொலை அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் நடந்தது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜூன் 7ம் தேதி இதே வருடம் இவர் தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணசாமி மரணம் கடந்த மே மாதம் 6ம்தேதி நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவர் நேற்று இரவு முழுக்க ரயிலில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் கேரளா செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளான மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

ஏஞ்சலின் சுருதி தற்கொலை தற்போது சென்னையில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர் சென்னையில் சோலையூரை சேர்ந்தவர். சேலையூரில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால் மாணவி ஏஞ்சலின் சுருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

You might also like More from author