அமெரிக்காவில் பனிப்புயல்: 500 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகள் மற்றும் வீடுகள் மீது பனி கொட்டுகிறது. டகோடா, மின்னெசோட்டா, கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் ரோடுகள் மூடப்பட்டுள்ளன.

விமான நிலையங்களில் 8 முதல் 18 அங்குலம் அளவுக்கு பனி உறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5700 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.

கடும் பனிப்புயலுக்கு 3 பேர் பலியாகினர். லூசியானாவில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 58 வயது பெண் பலியானார். கன்சாசில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இவர் தவிர மேலும் ஒருவர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like More from author