வீழ்ச்சி காணும் இந்திய ரூபாய் மதிப்பு.. மிக மோசமான நிலையை அடைந்தது..

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு மீண்டும் சரிவு ஏற்பட்டு 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71.40 ரூபாய் ஆகியுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆளாகியுள்ளது.

10 நாட்களுக்கு முன் இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. ஏழையான நாடுகளிக்கு நிகராக இந்தியாவிலும் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. நேற்று முதல்நாள் 72 ரூபாய் ஆனது. அதன்பின் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் 71 ரூபாய்க்கு சென்ற மதிப்பு தற்போது 40 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.40 ரூபாயை தொட்டுள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு பொருளாதார காரணங்களால் தொடர்ந்து டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

You might also like More from author