அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்க மாநாடு “EMICON 2018”

தேசிய அளவிலான அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்க மாநாடு “EMICON 2018” அப்போலோ சிறப்பு மருத்துவமனை நான்காம் ஆண்டாக ஹோட்டல் சங்கத்தில் நடத்தியது.சிறப்பு விருந்தினர்கள் திருச்சி நகர காவல்துறை ஆணையர் முனைவர் திரு. A. அமல்ராஜ் IPS அவர்களும்திருச்சியின் மூத்த மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் இராமகிருஷ்ண ஈஸ்வரன்அப்போலோ குழுமத்தின் முதன்மை இயக்க அலுவலர் திருமதிரோகினி ஸ்ரீதர்இவர்களுடன் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மருத்துவமனை நிர்வாகி மற்றும் துணை மருத்துவ இயக்குனர் S.செந்தில்குமார் இணைந்து குத்துவிளக்கேற்றி இந்நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்திரு.இராமகிருஷ்ண ஈஸ்வரன்மருத்துவத்துறையின் முன்னேற்றங்கள் மற்றும் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் பங்களிப்பு குறித்து பேசினார்.

அப்போலோ குழுமத்தின் முதன்மை இயக்க அலுவலர் திருமதிரோகினி ஸ்ரீதர் பேசுகையில் இந்தியாவில் அவரசர சிகிச்சை போதிய அளவில் மக்களுக்கு கிடைக்காமல் ஓவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்,அவசரசிகிச்சைத்துறை என்பது மருத்துவமனையின் முக்கிய அங்கமாகும் இதில் உரிய தரமான மருத்துவ சேவை வழங்கப்படுமாயின் நோயாளிகளுக்கு ஏற்படும் உயிர் சேதம் மற்றும் நெடுநாள் மருத்துவமனை அனுமதியை தடுக்க இயலும்.இத்தகைய உலகத்தர அவசரசிகிச்சையை திருச்சி மருத்துவமனையில் வழங்கப்படுவதில் அப்போலோ குழுமம் பெருமை கொள்கிறது என்று கூறினார்நோயாளிகளுக்கான சேவைமட்டுமின்றி மருத்துவர்களுக்கும் இன்றைய நிகழ்ச்சி போல மருத்துவக்கருத்தரங்கை நடத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன் என்றார்.

இந்தக்கருத்தரங்கில் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் திருவேல் அரவிந்த்ஈரல் இயல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் திருகுமரகுருபரன்சென்னை மியாட் மருத்துமனை இரத்த மாற்று சிகிச்சை நிபுணர் மருஜோஷுவா டேனியல்சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை தீவிர பிரிவு நிபுணர் திரு.எபினேசர் ஆகியோர் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள முன்னேற்றங்கள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர்இக்கருத்தரங்கில் இருநூற்றுக்கும் மேலான மருத்துவர்களும்மருத்துவ மேற்படிப்பு மாணவர்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

You might also like More from author