ஆசிப் பிரியாணி விளக்கம் – இது எங்கள் எதிரிகளின் சூழ்ச்சியாகவும், சதியாகக்கூட இருக்கலாம்

சென்னை, 20 அக்டோபர் 2018: ஆசிப் பிரியாணி (Aasife Biriyani) தரமில்லை என்று கூறி கடந்த அக்டோபர் 3ம் தேதி கிண்டியில் உள்ள ஆசிப் பிரியாணி தயாரிப்பு குடோன் சீல் வைக்கப்பட்டது. இன்று (20.10.2018), அந்நிறுவன உரிமையாளர் ஆசிப் இது தொடர்பாக ஆலந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்

புகை போக்கிகள் இல்லை, உணவு தயாரிக்கும் இடத்தில் சுகாதாரம் பேணப்படவில்லை உள்ளிட்ட சில காரணங்களுக்காக குடோன் சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். உணவு தரமில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது, இது எங்கள் எதிரிகளின் சூழ்ச்சியாகவும், சதியாகக்கூட இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்

பின்னர் ஹோட்டல் நிர்வாகத்தினரும் ஆசிப்பின் அக்கா மகனுமான பாசித்தும் சேர்ந்து விளக்க செய்தியாளர் கூட்டம் நடத்தினர். 38 கடைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். உழைப்பால் மட்டுமே கடையின் உரிமையாளர் முன்னேறியுள்ளார். நல்ல உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனபதே அவரின் நோக்கமாக உள்ளது என கூறினார்

You might also like More from author