பெண் ஆசிரியரின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு வாலிபர் ஓட்டம்!!

ஜார்கண்ட் மாநிலத்தில் கார்ஷ்வா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி அருகில் பெண் ஆசிரியரின் தலையை துண்டித்து, துண்டிக்கப்பட்ட தலை எடுத்துக்கொண்டு 5 கிமீ ஓடிய மர்ம வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் கார்ஷ்வா மாவட்டத்தில் உள்ள செராய்கேளா என்ற இடத்தில இயங்கிவந்த ஹாப்ரசை ப்ரைமரி பள்ளியில் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சுக்ரா ஹெசா என்ற பெண் ஆசிரியரை அதே பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபராக அறியப்படும் ஹெம்ப்ராம் என்ற இளைஞர் வலுக்கட்டாயமாக அருகிலுள்ள வீட்டிற்கு இழுத்து சென்று கத்தியால் பெண் ஆசிரியரின் தலையை துண்டித்துள்ளான்.

மேலும் இந்த சம்பவம் அறிந்து அங்குவந்த சிலர் அதிர்ந்து அவனை துரத்தி பிடிக்க முற்பட்டுள்ளனர். இதனால் பயந்த அந்த வாலிபர் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்கொண்டது கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் ஓடியுள்ளான்.

ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் என அனைவரும் அவனை பின்தொடர்ந்து ஓடியுள்ளனர். அங்கு உள்ள ஒரு காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிக்க முயன்ற அந்த வாலிபரை ஊர் மக்கள் அடித்து உதைத்துள்ளனர். இதனால் காயமடைந்த அந்த வாலிபரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

You might also like More from author