ஆஸ்திரேலிய பிரதமர் இந்திய அணி வீரர்களுக்கு புத்தாண்டு விருந்து

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 – 1 என முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு தனது இல்லத்தில் இன்று புத்தாண்டு விருந்தளித்து அசத்தினார்.
இந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்பட அனைத்து வீரர்களும், அணி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

You might also like More from author