இந்தியர்களுக்கும் மலிவு விலையில் மருத்துவ சிகிச்சை; மோடி

Medical -treatment-at- affordable -prices- for- Indians-Modia

அனைத்து இந்தியர்களுக்கும் மலிவு விலையில் மருத்துவ சிகிச்சை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காதாரத்துறையில் மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால் பலனடைந்தவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது: உடல் நல பிரச்னைகள் ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அனைத்து இந்தியர்களுக்கும், மலிவு விலையில் மருத்துவ சிகிச்சை கிடைக்க முயன்று வருகிறோம். ஏழைகளுக்கு மருந்துகள் கிடைப்பது பெரிய பிரச்னையாக உள்ளது. மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தால் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர். மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் விலை குறைக்கப்பட்டுள்ளதால் ஏழைகளுக்கு பெரிதும் பயன்பெற்றுள்ளனர். ஆரோக்கிய இந்தியா என்பதில், தூய்மை இந்தியா திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

You might also like More from author