இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது

தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

அதனை முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஜடேஜா 63 ரன்களும், ராகுல் 60 ரன்களும் எடுத்து கைகொடுக்க 332 ரன்கள் எடுத்து இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து  திணறி வருகிறது.

You might also like More from author