இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த பூடானுக்கு ஜனாதிபதி பாராட்டு

பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல் வாங்சுக் தனது மனைவி மற்றும் மகனுடன் 4 நாள் அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

டோக்லாம் பிரச்சனையில் பூட்டான் ஆதரவு வழங்கியதற்கு ஆழ்ந்த பாராட்டுக்கள். பூட்டானின் தனிப்பட்ட வழிகாட்டுதல், மற்றும் ஆதரவு சமீபத்திய சூழலை உரையாற்றுவதற்கு வழிவகை செய்துள்ளது. இரு தரப்பட்ட உறவுகள் தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. பூட்டானின் அறிவையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

பூட்டானில் விரைவான வளர்ச்சியை பார்க்கும் போது இந்தியாவின் கலச்சாரம் மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்கும் அதே நேரத்தில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது.

இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author