இந்தியா உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு

ஏழைகளும், பணக்காரர்களும் விரும்பி சாப்பிடும் கிச்சடியை நவம்பர் 4-ம் தேதி ‘வேர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்வில் கிச்சடியை உலக அளவில் பிராண்ட் இந்தியா உணவாக வளர்த்தெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை கொள்கையை குறியீட்டு ரீதியாக வலியுறுத்துவது கிச்சடி என்று கூறப்பட்டுள்ளது.

நவம்பர் 4-ம் தேதி மிகப்பெரிய கடாயில், அதாவது 1000லிட்டர் கொள்ளளவு கொண்ட, 7 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய கடாயில் 800கிலோ கிச்சடி சமைக்கப்படவுள்ளது.

இந்த கிச்சடியைச் சமைக்க பிரபல செஃப் சஞ்சீவ் கபூர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வை உணவுத்துறை அமைச்சகமும் சிஐஐயும் சேர்ந்து நடத்துகிறது.

சமைக்கப்பட்ட கிச்சடி விழாவுக்கு வருகை தரும் விருந்தாளிகளுக்கும், 60,000 அநாதைக் குழந்தைகளுக்கும் வழங்கப்படவுள்ளது. அதே போல் அயல்நாட்டு தூதரகங்களுக்கும் கிச்சடி, அதனை தயாரிக்கும் முறையுடன் வழங்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்தார்.

அதே போல் கிச்சடி உலகம் முழுதும் கிச்சடி கிடைக்கும் அளவுக்கு இதனை பிராண்டாக மாற்றுவதை உறுதி செய்வோம் என்று மத்திய அமைச்சர் பாதல் தெரிவித்தார்.

You might also like More from author