இந்தியா உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேசம் மோதல்

6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை – வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள் ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங் காங் அணிகளும் ‘பி’ பிரிவில் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் அணி களும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் இருந்து இரு அணிகள் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் பறிகொடுத்த நிலையில் ஆசிய கோப்பை தொடரை சந்திக்கிறது இந்திய அணி.

ரோஹித் சர்மா குழுவினர் தங் களது முதல் ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி ஹாங் காங் அணியை சந்திக்கிறது. அடுத்த நாளே பரம வைரியான பாகிஸ்தான் அணி யுடன் இந்தியா மோதுகிறது. குறுகிய வடிவிலான போட்டிகளில் ரோஹித் சர்மா பேட்டிங்கில் அபார திறனை வெளிப்படுத்தக்கூடியவர் என்றாலும் அவரது கேப்டன் திறன் தரமான எதிரணிகளுக்கு எதிராக சோதிக்கப்படவில்லை. கடந்த டிசம்பர் மாதம் பலம் குன்றிய இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார். இம்முறை இலங்கை அணி சற்று வலுவாக உள்ளது. சமீபகாலமாக சிறந்த பார்மில் உள்ள வங்கதேசம் அணியும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச் சாளரான முகமது அமீர், ஆல் ரவுண்டர் ஹசன் அலி, தொடக்க வீரர் பஹர் ஸமான், திறமை மிகுந்த இளம் வீரர்களான பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் ஆகியோரை உள்ளடக்கிய பாகிஸ் தான் அணியை, இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது என் பதும் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி யுள்ளது. இந்தத் தொடரில் நடுகள வரிசை பேட்டிங்கை செட்டில் செய்வதை இந்திய அணி நிர்வாகம் குறிக்கோளாக கொண்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஆசிய கோப்பை தொடரை பொறுத்தவரையில் வங்கதேச அணி கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு டி 20 வடிவில் நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் சொந்த மண்ணில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியிருந்தது. இதற்கு முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரிலும் வங்கதேச அணி இறுதிப் போட்டியில் கால் பதித்திருந்தது.

இம்முறை போட்டி நடைபெறும் துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள மந்தமான ஆடுகளங்களுக்கு தகுந்தபடியான சிறந்த பந்து வீச்சை மஷ்ரஃப் மோர்டாசா தலைமை யிலான வங்கதேச அணி கொண் டிருப்பதாக கருதப்படுகிறது. பேட் டிங்கில் தமிம் இக்பால், மஹ்மு துல்லா ரியாத், முஸ்பிஹூர் ரகிம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர் களாக உள்ளனர்.

இலங்கை அணி கடந்த 24 மாதங்களில் இந்திய அணிக்கு எதிராக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் படுதோல்விகளை சந்தித்து கடும் விமர்சனங்களை சந்தித்தது. மூத்த வீரர்கள் ஓய்வுக்கு பின்னர் அந்த அணி இன்னும் சரியாக செட்டில் ஆகவில்லை. ஒட்டுமொத்த அணி யாக மாற்றம் காண்பதற்கு வீரர்கள் நீண்ட காலம் எடுத்துக் கொள்வது பலவீனமாக உள்ளது. மேலும் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக பிரச்சினைகளுடன் ஊதிய ஒப்பந்தமும் தொற்றிக்கொள்ள அணியின் திறனில் மேலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அணியின் பிரச்சினையே தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படாததுதான். எனினும் அனுபவம் வாய்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா, திஷாரா பெரேரா, லஷித் மலிங்கா ஆகியோருடன் இளம் வீரர்களான அகிலா தனஞ்ஜெயா, டசன் ஷனகா, கசன் ரஜிதா ஆகியோர் திறம்பட செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில் டி 20 ஆட்டங் களில் உயர்மட்ட திறனை வெளிப் படுத்தி வரும் சுழற்பந்து வீச்சா ளரான ரஷீத் கான், முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத் தலாக இருக்கக்கூடும் என கருதப் படுகிறது. மொகமது ஷாஸாத் உள்ளிட்ட சில வீரர்கள் பேட்டிங் கிலும் முத்திரை பதிக்கக்கூடியவர் கள். இதனால் இந்தத் தொடரில் முன்னணி அணிகளுக்கு நிச்சயம் ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி அளிக்கக்கூடும்.

ஹாங் காங் அணியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அன்ஸூமன் ரத் வழிநடத்துகிறார். அந்த அணி இந்தத் தொட ரில் மோதும் அனைத்து ஆட்டங் களுக்கும் சர்வதேச அந்தஸ்தை ஐசிசி வழங்கியுள்ளது. இதனால் ஹாங் காங் அணிக்கு இந்தத் தொடர் பொன்னான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

அணிகள் விவரம்

வங்கதேசம்: மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), தமிம் இக்பால், லிட்டன் குமார் தாஸ், முஸ்பிஹூர் ரகிம், மஹ்முதுல்லா ரியாத், மொமினுல் ஹக், ஆரிபுல் ஹக், முகமது மிதுன், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹோசைன், மெகதி ஹசன் மிராஸ், மோசடக் ஹோசைன், நஸ்முல் இஸ்லாம், நஸ்முல் ஹோசைன் ஷான்டோ, அபு ஹைதர் ரோனி.

இலங்கை: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), குசால் பெரேரா, மெண்டிஸ், உபுல் தரங்கா, திஷாரா பெரேரா, நிரோஷன் திக்வெலா, தனஞ்ஜெயா டி சில்வா, டசன் ஷனகா, கசன் ரஜிதா, அகிலா தனஞ்ஜெயா, அமிலா அபோன்சோ, லஷித் மலிங்கா, துஷ்மந்தா சமீரா, திலுருவன் பெரேரா, சீஹன் ஜெயசூரியா.நேரம்: மாலை 5

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1

You might also like More from author