இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டம்- இஸ்ரோ தலைவர்

இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக, இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ள புதிய திட்டம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

நாட்டின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சிப் பணியில் இஸ்ரோ பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதில் தற்போது இந்தியாவின் எதிர்காலமான  இளைஞர்கள் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பினை உருவாக்க உள்ளது. இதற்கான  தொடக்கமாக இஸ்ரோ மாணவர்களுக்கென திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு “இளம் விஞ்ஞானிகள் திட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நானே நேரடியாக மாணவர்களை சந்தித்து பேசவுள்ளேன்.

இந்த திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபாடுள்ள 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு  இஸ்ரோ அமைப்பின் மூலம் தகுந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதில் மாணவர்கள் சிறிய செயற்கைக்கோள்களை செய்ய அனுமதித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த படைப்பினை இஸ்ரோ நிறுவனமே வாங்கிக் கொள்ளும்.

இதன் முதல் கட்டமாக, விண்ணில் ஏவ தயாராகி வரும் பிஎஸ்எல்வி சி44 ராக்கெட்டுடன், முதல் முறையாக மாணவர்களின் செயற்கைக்கோளும் சோதனைக்காக  இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

இந்த சிறிய செயற்கைக்கோளுக்கு “கலாம் சாட்” என பெயரிடப்படும். அனைத்து சோதனைகளுக்கான செலவுகளுக்கும் இஸ்ரோவே பொறுப்பேற்கும். இத்திட்டம் அனைத்து மாநில அரசின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும்.

You might also like More from author