உலகின் மிக நீண்ட ‘நான்-ஸ்டாப்’ விமானம் இன்று காலை புறப்பட்டது: சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்கு 19 மணி நேரப் பயணம்

வேறு எங்கும் இடைநிற்காமல் உலகின் மிக நீண்ட தூர பயண அனுபவத்தைத் தரும் விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று காலை (வியாழக்கிழமை) புறப்பட்டது. 19 மணிநேரத்தில் இவ்விமானம் நியூயார்க்கை சென்றடையும்.

வேறு எந்த நகரிலும் இறங்காமல் ஒரே பயணமாக செல்லும் உலகின் மிக நீண்ட தூரப் பயண அனுபவத்தைத் தரும் ‘நான் ஸ்டாப் சிங்கப்பூர் நியூயார்க் விமானம்’ ஏற்கெனவே தொடர்ந்து இயங்கிவந்தது. ஆனால் இதற்கு அதிக விமானக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்ததை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இப்போக்குவரத்தை நிறுத்திக்கொண்டது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநில்லா விமானப் பயணம் மீண்டும் தற்போது தொடங்கியுள்ளது. 19 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை இவ்விமானம் கடந்துசெல்கிறது.

மீண்டும் கோரிய வாடிக்கையாளர்கள்

பயணத்தின் போது இடைத்தங்கல் என்பது பயணத்தின் நேரத்தை நிறைய செலவாகிறது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனராம். அதைத் தொடர்ந்து தங்களுக்கு ஒரு முழுமையான பயணத்தைத் தரும் இடைநில்லா நான்ஸ்டாப் விமானப் பயணம் மீண்டும் தொடங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இன்று புறப்பட்ட விமானத்தில் பிஸினஸ் வகுப்பு இருக்கைகள் முழுவதும் நிரம்பியதாக ஏர்லைன்ஸ் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.

ஒரு பிஸினஸ் வகுப்பு டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு சாப்பாடுடன் படுக்கை வசதியும் உண்டு. பிரீமியம் எகனாமிக் வகுப்பில் உணவு வழங்கப்படுகிறது. இந்த விமானத்தில் எக்னாமிக் வகுப்பு இல்லை.

இதற்கென்று தொடங்கப்பட்டுள்ள புத்தம் புதிய இந்த ஏர்பஸ்ஸில் 161 பயணிகள் செல்லலாம். 67 பிஸினஸ் வகுப்பு, 94 பிரீமியம் எகனாமிக் வகுப்புப் பயணிகள் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

You might also like More from author