உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடக்கம் …

கால்பந்து திருவிழாவான உலக கோப்பை காப்லந்து போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தபப்டுகிரது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

  
இந்த ஆண்டு 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாகளமாக துவங்கவுள்ள இந்த போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் ரஷியா – சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. 2010 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் பால் என்ற ஆக்டோபஸ் ஈடுப்பட்டது.
இந்த முறை உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க அசிலிஷ் என்ற பூனை ஈடுப்பட்டுள்ளது.
அதன்படி முதல் ஆட்டத்தின் முடிவுகல் இந்த பூனை கணித்துள்ளது. பூனையின் கணிப்பின்படி இன்றைய முதல் போட்டியில் ரஷ்யா வெற்றி பெறும் என கணித்துள்ளது. பூனையில் கணிப்பு சரியானதா என போட்டியின் முடிவில் தெரியும்.
அதேபோல், கூகுள் நிறுவனம் இதனை கொண்டாடும் வகையில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்களுக்காக டூடுல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

You might also like More from author