சட்டசபை தலைவராக எடியூரப்பா; ஒரு மனதாக தேர்வு!!

கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழலில் நடந்த பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகு கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

கவர்னரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, சட்டசபை தலைவராக கட்சி என்னை ஒரு மனதாக தேர்வு செய்தது. ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரி உள்ளோம். ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்தையும் கவர்னரிடம் அளித்துள்ளோம். அதனால் கவர்னர் எங்களின் கோரிக்கையை பரிசீலித்து ஆட்சி அமைக்க அழைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

கவர்னரிடம் கடிதம் வந்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறேன். கவர்னரிடம் இருந்து அழைப்பு வந்த உடன் நாளை நாங்கள் பதவியேற்க உள்ளோம் என்றார்.

இதற்கிடையில் சுயேட்சை எம்எல்ஏ.,க்கள் சிலர் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மஜத மற்றும் காங்., கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் சிலரும் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் மாயமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author