எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க இந்திய விமானப்படை தயார்!!

எந்தவிதமான எதிர்பாராத தாக்குதல்கள் வந்தாலும், அவற்றை சந்திக்க, இந்திய விமானப் படை தயாராக உள்ளது,” என, இந்திய விமானப் படை தளபதி, பி.எஸ்.தானோ தெரிவித்து உள்ளார்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, இந்திய விமானப் படை அகாடமியில், விமானப் படை வீரர்களின் அணிவகுப்புக்கு பின், இந்திய விமானப் படை தளபதி, பி.எஸ்.தானோ கூறியதாவது: இந்திய விமானப் படை வீரர்களின் திறமை, சமீபத்தில் நடந்து முடிந்த, ‘ககன்சக்தி’ பயிற்சியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி, வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது, இந்திய விமானப் படையின் செயல்பாட்டு தன்மையை காட்டுகிறது.

இதன் மூலம், எந்த விதமான எதிர்பாராத தாக்குதல்கள் வந்தாலும், அவற்றை சந்திக்க, இந்திய விமானப் படை தயாராக உள்ளது. இந்திய விமானப் படை, நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. நாட்டு பிரச்னைகளை தீர்ப்பதிலும், இந்திய விமானப் படை முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author