எல்லையில் நிலைமையை ராணுவம் சிறப்பாக கையாள்கிறது-ராணுவ தளபதி

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள சூழலை இந்திய ராணுவம் சிறப்பாக கையாள்வதாகவும், இதில் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிபின் ராவத், “ ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை இன்னும் மேம்பட வைக்க வேண்டியது அவசியம். ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த உதவும் பணியை மட்டுமே நாங்கள் செய்கிறோம்.
வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள சூழலை நாங்கள் சிறப்பாக கையாண்டு வருகிறோம். காஷ்மீர்  மக்கள் பயங்கரவாதிகளாலே பாதிக்கப்படுகின்றனர். நல்ல கட்டுப்பாட்டின் கீழ் காஷ்மீர் நிலைமை கொண்டு வரப்பட வேண்டும்.
ராணுவத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.  சில நாடுகள் தாலீபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டிய போது, இந்தியா பேச்சு வார்த்தை நடத்தியது. வன்முறையை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்றார்.

You might also like More from author