ஐரோப்பாவில் ரஜினி படத்தின் ஷூட்டிங்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்தின் ஷூட்டிங், ஐரோப்பாவில் நடைபெற இருக்கிறது.

ரஜினி தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கின்றனர்.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இது ரஜினியின் 165-வது படமாகும். ஹாஸ்டல் வார்டனாக ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில் அவருடைய கேரக்டருக்கு காளி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் இந்தப் படத்தின் கதை நிகழ்கிறது.

டேராடூன், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் ஷூட்டிங்கை முடித்த கார்த்திக் சுப்பராஜ், சமீபத்தில் சென்னை மீனம்பாக்கம் பின்னி மில்லில் படப்பிடிப்பு நடத்தினார். இதில், ரஜினி, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

அடுத்ததாக, ஐரோப்பாவில் ஷூட்டிங் நடக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. மொத்தம் 40 நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்களாம்.

You might also like More from author