ஒரே டேக்கில் நீளமான வசனம் பேசிய அஜித்! படக்குழுவினர் வியப்பு!!

நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படத்தில், நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார்.

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில், நடிகர்கள் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைக்கிறார். ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படபிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், பிங்க் ரீமேக் படத்தில் நடிகர் அஜித்துக்கு நீளமான ஒரு டையலாக் வழங்கப்பட்டது. இந்த வசனத்தை அஜித் ஒரே டேக்கில் பேசிவிட்டார். இதனை பார்த்த அங்கிருந்த படக்குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கினர். இது பற்றி படக்குழுவினர் சிலர் கூறும் போது, ‘வழக்கமாக மற்ற நடிகர்களாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை டையலாக்கை சொல்லி பார்த்து, பல முறை டேக் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், நம்ம தல அவ்வளவு பெரிய டையலாக்கை வெறும் ஒரே ஷாட்டில் பேசியுள்ளார். இது எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது’. இவ்வாறு தெரிவித்தனர்.

You might also like More from author