ஒரே நாளில் ரூ.7 கோடியை அள்ளிய ‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’

மார்வெல் நிறுவனத்தின் 20வது படமாக வெளியாகியாகியிருக்கும் ’ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’ திரைப்படம் வெளியான 2 நாட்களில் 16 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் “ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப் திரைப்படம் இந்தியாவில் வெளியான இரண்டே நாட்களில் 16.02 கோடி ரூபாய் வசூலித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’சூர்மா’ திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருப்பதாகவும் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு வெளியான மார்வெல் திரைப்படங்களான ’அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ ரூ.250 கோடியும், ’டெட்பூல்’ரூ. 33 கோடியும் முதல் வாரத்தில் வசூல் செய்திருந்தன.

’ஜுராசிக் பார்க்: தி ஃபாலன் கிங்டம்’திரைப்படம் முதல் வாரத்தில் வசூலித்த தொகை ரூ.53 கோடி.

‘ஆன்ட்-மேன் அன்ட் த வாஸ்ப்’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை வசூலித்திருக்கும் தொகை 190 மில்லியன் டாலர்கள். படத்தின் மொத்த பட்ஜெட் 162 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author