ககன்யான் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இந்த திட்ட தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகா நியமிக்கப்பட்டு உள்ளார்.
3 வீரர்கள் கொண்ட குழுவை 7 நாட்களுக்கு விண்வெளியில் அனுப்பி வைக்கும் திட்டம் இதுவாகும். திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள், மனிதர்கள் செல்லும் விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இந்த ககன்யான்  திட்டத்திற்கு  ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரூ.10 ஆயிரம் கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

You might also like More from author