கருப்பு பட்டியலில் மசூத் அசாரை வைக்க அமெரிக்கா தீவிரம்

வாஷிங்டன்,
ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அறிவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை இட்டு வருகிறது. இதனால், மசூத் அசாரை சரவதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த சூழலில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கருப்பு பட்டியலில் மசூத் அசாரை சேர்க்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. 15 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில், பிரான்சு, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் வரைவு தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேறும் பட்சத்தில், மசூத் அசாருக்கு எதிராக ஆயுத தடை, பயண தடை விதிக்கப்படுவதோடு அவரது சொத்துக்களும் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You might also like More from author