கவுத்திமலையில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்காக சென்னை – சேலம் இடையே  பசுமை வழிச்சாலை அமையவில்லை மாவட்ட ஆட்சியர் தகவல்  

திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்திமலையில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்காக சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது என்பது தவறான கருத்து என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை – சேலம் இடையே (என்.எச். 179ஏ மற்றும் என்.எச். 179பி) அமைக்கப்படவுள்ள பசுமை வழிச்சாலை திட்டத்தால் 51 கி.மீ. தொலைவு குறைவாகவும் இரண்டரை மணிநேரத்தில் சென்றடையலாம். தொழில் நகரங்களாக சென்னை சேலம் ஈரோடு திருப்பூர் கோவை மற்றும் சுற்றுலாத்தலங்களான திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகிய மார்க்கங்களை இணைக்க பெரிதும் உதவுகிறது. விவசாய விளைபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் துரிதமாக கொண்டு செல்லலாம். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும். அதன்மூலம் மாவட்டமும் வளர்ச்சி பெறும் சாலையின் இருபுறமும் உட்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி பெறுவதால் வர்த்தக பயன்பாடு அதிகரித்து வேலைவாய்ப்புகள் ஏற்படும். நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயரும் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக மலை பகுதி மற்றும் வனப்பகுதி போன்றவை வெகுவாக தவிர்க்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 கி.மீ. தொலைவுக்கு 18 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வனநிலத்தில் மட்டுமே சாலை அமைக்கப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் வன நிலத்துக்கு ஈடாக 2 மடங்கு அளவுக்கு வனத்துறைக்கு அரசு நிலத்தை வழங்கி வனப்பகுதியாக மாற்றம் செய்யப்படும். குறைந்த அளவிலான மரஙகள் மட்டுமே வெட்டப்படுகின்றன. அதே நேரத்தில் 277 கி.மீ. தொலைவுக்கு இருபுறமும் சுமார் 3 லட்சம் மரங்கள் நடப்படுகின்றன. அகற்றப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்திமலை மற்றும் வேடியப்பன் மலைக்கும் பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ள இடத்துக்கும் இடையே 10 கி.மீ. தொலைவு உள்ளது. கவுத்திமலையில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்துச்செல்வதற்காக பசுமை வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது என்பது தவறான கருத்தாகும். பாதசாரிகள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத வகையில் சாலையின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படும். நில உரிமையாளர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையான இடங்களில் சாலையின் கீழே கடந்து செல்வதற்கு பாதை மற்றும் அணுகுசாலை அமைக்கப்படும் பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் 155 ஹெக்டேர் தனிநபர்களின் நஞ்சை நிலங்கள் 100 ஹெக்டேர் புஞ்சை நிலங்கள் 605 ஹெக்டேர் கையகப்படுத்தப்படவுள்ளது. கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு நில மதிப்பீட்டு மேல் கூடுதலாக ஒன்றரை மடங்கு நில மதிப்பு தொகையுடன் கட்டிடம் மதிப்பு மற்றும் பலன் தரும் மரங்களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். மேலும் நில விபர அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதியில் இருந்து தீர்ப்பு வழங்கப்படும் தேதிவரை உள்ள காலத்துக்கு 12 சதவீதம் கூடுதல் மதிப்பிட்டு தொகை கணக்கிட்டு செய்து இழப்பீட்டு தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் இத்திட்டதால் எதிர்கால பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு நிறைவேற்றப்படும் சிறப்பான திட்டமாகும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இதற்கு அனைத்து தரப்பு மக்களும் விவசாயிகளும் பூரண ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பான சந்தேகங்களை துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ளலாம். 3ம் நபர்கள் மூலம் சமூக வளைதலங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வளைதலங்களில் வரும் தகவல்கள் உண்மையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like More from author