காட்டுரில் சிறுபான்மையினர் சார்பில் மாபெரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் சார்பில் மாபெரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காட்டுரில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் எம்பி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருச்சி மாநகர் மாவட்டம், திருவெறும்பூர் பகுதி கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்டகழக செயலாளர் ப.குமார் எம்பி தலைமையில் நடைபெற்றது. பகுதி கழக செயலாளர் பாஸ்கர் என்கிற கோபால்ராஜ் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சரும், மாவட்ட அவைத்தலைவருமான வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் திருநங்கைகள் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினர்.

You might also like More from author