காப்பான் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் இதுதானாம் – வெளிவந்த ரகசியம் இதோ!

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள காப்பான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது

சமீபத்தில்தான் இப்படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான ரயில் சண்டைக் காட்சியை படக்குழு படமாக்கி முடித்தனர்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த், வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக காப்பான் பட அப்டேட் வெளிவரும் என்று கூறியிருந்தார்.

இது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அது என்னவென்ற தகவல் தற்போது நமக்கு கிடைத்திருக்கிறது.

அதாவது காப்பான் படத்தின் டீசர்தான் தமிழ் புத்தாண்டில் வெளியாகிறதாம். இதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

இது ஒரு பக்கம் இருக்க இப்படத்தின் இசை பணிகளில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தன் பங்கிற்கு தீவிரமடைந்துள்ளார்.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

You might also like More from author