காளி திரைப்படத்தின் முதல் 7 நிமிடங்கள்…

விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் காளி. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் மனைவி , கிரைப்படத்தில் சுனைனா, அஞ்சலி, மதுசூதன் ராவ், யோகி பாபு ,நாசர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனருத்திகா உதயநிதி இயக்கியிருக்கிறார். ஆக்ஷன், திரில்லர், சஸ்பென்ஸ் என பன்முகங்களை கொண்டிருக்கும் இந்த திர்.

மே 18 அன்று இந்த திரைப்படத்தை வெளியிட காளி படக்குழு முடிவு செய்திருக்கிறது. முன்னதாக பிரமோஷனுக்காக இந்த திரைப்படத்தின் முதல் 7 நிமிட வீடியோவை விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஒரு மருத்துவராக நடித்திருக்கிறார். அவருக்கு சம்பந்தமில்லாத காட்சிகள் கனவில் வந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு நாள் அவரது அம்மா என அவர் இத்தனை நாள் நம்பியவர் தன்னை பெற்ற அம்மா அல்ல, வளர்த்தவர் தான் எனும் உண்மை அவருக்கு தெரியவருகிறது. அதனை தொடர்ந்து அவருக்கு வரும் கனவுகளுக்கும், அவரது நிஜ வாழ்க்கையின் உண்மைகளுக்கும் இடையேயானது தான் காளி படத்தின் மீதிக்கதை.

You might also like More from author