குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 11 ம் தேதி கூடுகிறது

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடவில்லை.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு தாமதமாகலாம் என எதிர்க்கட்சிகள் கருதி வந்தன.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி முதல் தொடங்க உள்ளது என பாராளுமன்ற விவகாரங்கள் துறை இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், குளிர்கால கூட்டத்தொடரை ஜனவரி 8-ம் தேதி வரை நடத்தவும் முடிவானது என தெரிவித்துள்ளது.

You might also like More from author