குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தினம்

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தினமான 12.06.2018 அன்று திருச்சி, தேசியக் கல்லூரியில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சுந்தரராமன் தலைமையில் அனைவரும் எடுத்தனர்.

உறுதிமொழியை முனைவர் ச. கருத்தான் வாசிக்க அனைவரும் திரும்பக் கூறினர். அனைவரும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்த வித பணியிலும் ஈடுபடுத்த மாட்டோம் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்போம் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு எங்களால் இயன்றவரை பாடுபடுவோம் எனவும் உளமார உறுதி கூறுகிறோம் என உறுதி மொழி எடுத்தனர். கல்லூரியின் என்.சி.சி. மாணவர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பிற மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். அனைவரும் அவரவர்கள் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான விழிப்புணர்ச்சியை இந்த உறுதி மொழி ஏற்.படுத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

You might also like More from author