சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே சரியாகப் போகவில்லை.

எனவே, மறுபடியும் தன்னுடைய முதல் பட ஹீரோவும், குருநாதருமான சசிகுமாருடன் இணைய இருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூரி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், இதை படக்குழு மறுத்தது. இந்நிலையில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் ஷூட்டிங், காரைக்குடி மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் நடைபெறுகிறது.

You might also like More from author