சண்டை படத்தில்இரட்டை வேடத்தில்அரவிந்தசாமி

அரவிந்தசாமி கதை கேட்டு சமீபத்தில் நடிக்க சம்மதித்த படத்தை ‘சலீம்’ புகழ் நிர்மல்குமார் டைரக்டு செய்ய இருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதில், அரவிந்தசாமி இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.
“கதைப்படி, ஒருவர் ஒல்லியாக அழகாகவும், இன்னொருவர் முரட்டுத்தனமாகவும் இருக்க வேண்டும். 2 தோற்றங்களில் நடிப்பதற்காக அளவான சாப்பாடு மற்றும் கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து விட்டேன். சிறந்த கதைகள் மற்றும் தேர்ந்த இயக்குனர்கள் இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்” என்கிறார், நாயகன் அரவிந்தசாமி.
“அரவிந்தசாமி திறமையாக நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவருடைய நடிப்பு திறன், இந்த படத்தில் பேசப்படும். படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொடங்கும்” என்று தயாரிப்பாளர் வி.மதியழகன் கூறினா

You might also like More from author