சபரிமலையில் காட்சியளித்த மகரஜோதி

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று (திங்கட்கிழமை) மாலை நடந்தது.
மகரவிளக்கு பூஜையையொட்டி சாமி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் மாலை 6.20 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றை தந்திரி ராஜீவரு மற்றும் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பெற்று கொண்டனர்.
அந்த திருவாபரணங்களை சாமிக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தினர். இதைதொடர்ந்து, இன்று மாலை 6.35 மணி அளவில் பொன்னம்பல மேட்டில் சாமி ஐய்யப்பன் ஜோதி வடிவில் 3 முறை காட்சி கொடுக்கும் மகரஜோதி தரிசன வைபவம் நடைபெற்றது.

You might also like More from author