உங்கள் அழகை இன்னும் மெருகூட்ட ; ரோஸ் வாட்டர்

அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்வோம். அப்படி அழகை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர். உங்கள் வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அவற்றை அன்றாடம் பயன்படுத்தியே உங்கள் அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கலாம். ஏனெனில் ரோஸ் வாட்டருக்கு அவ்வளவு சக்தி உள்ளது.
சரும பிரச்சனைகளான எரிச்சல், வறட்சி, அதிகப்படியான எண்ணெய், கருமையான சருமம், மென்மையிழந்த சருமம் போன்றவற்றில் இருந்து ரோஸ் வாட்டர் எப்படி பாதுகாக்கிறது என தெரிந்துகொள்ளுங்கள்…

# முகம் சோர்ந்து, பொலிவிழந்து காணப்படும் போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தெளித்தாலோ அல்லது முகத்தை துடைத்து எடுத்தாலோ, முகம் உடனே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
# ரோஸ் வாட்டர் ப்ரிட்ஜில் வைத்து, அதனை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஊற வைத்தால், கண்கள் அழகாக காணப்படும்.
# தினமும் குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து குளித்தால், சருமம் மென்மையாகவும், சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
# ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும். சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி, சருமத்தை இளமையாகவும் காட்டும்.
# வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.

You might also like More from author

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com