சுனில் செத்ரி அபாரம்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

‘இன்டர்கான்டினென்டல்’கோப்பை கால்பந்து பைனலில் கேப்டன் சுனில் செத்ரி 2 கோலடித் கைகொடுக்க இந்திய அணி, 2-0 என கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசிய கோப்பை தொடருக்கு(ஜன. 5- பிப். 1, 2019) தயாராகும் வகையில் இந்திய அணி சொந்தமண்ணில் 4 அணிகள் பங்கேற்கும் ‘இன்டர்கான்டினென்டல்’ (கண்டங்களுக்கு இடையிலான) கோப்பை கால்பந்து தொடரில் விளையாடியது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த இந்தியா (தரவரிசையில் 97வது இடம்), கென்யா (112) அணிகள் மும்பையில் நடந்த பைனலில் மோதின.

அபாரமாக ஆடிய கேப்டன் சுனில் செத்ரி, 2 கோலடித்தார். முடிவில் இந்திய அணி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.

You might also like More from author