சுழற்சி முறையில் அமைச்சர் பதவி : காங்., திட்டம்!!

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு சமீபத்தில் பதவியேற்றது. இதனையடுத்து நீண்ட இழுபறி மற்றும் பேச்சுவார்த்தைக்கு பிறகு இலாக்கா ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு, ஜூன் 6 அன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சரவையில் அதிக அமைச்சர்களை கொண்டுள்ள காங்., கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதன்படி, காங்., கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏ.,க்களுக்கும் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க திட்டமிட்டுள்ளது.

இது பற்றி கர்நாடக காங்., தலைவர் பரமேஸ்வரா மற்றும் பொது செயலாளர் வேணுகோபால் ஆகியோர் கூறுகையில், இது இறுதி அமைச்சரவை கிடையாது. ஒவ்வொறு 6 மாதத்திற்கு ஒருமுறை அமைச்சர்களின் பணிகள் ஆய்வு செய்யப்படும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி இலக்கை எட்டாத அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படுவர். இதுவரை அமைச்சராக பதவி வகிக்காத எம்எல்ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எம்எல்ஏ.,க்களிடம் தெரிவித்துள்ளனர்.

You might also like More from author