சென்னை, சேலம் மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை

சென்னை,
சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  சென்னையின் அண்ணாநகர், ரெட்டேரி, கொளத்தூர், அடையாறு, பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர், மீனம்பாக்கம், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையின் புரசைவாக்கம், பெரியமேடு, எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான அளவில் மழை பெய்து வருகிறது.  சேலத்தில் ஓமலூர் அருகே ஆட்டுக்காரனூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

You might also like More from author