சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அரும்பாக்கம், முகப்பேர், கே.கே.நகர், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலையில் திடீரென கன மழை பெய்தது. இதேபோல் ஓரிக்கை, செவிலிமேடு, ஸ்ரீபெரும்புதூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கன மழை பெய்தது. மழையால் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர் பல்லாவரம், தாம்பரம், அடையாறு, ஒ.எம்.ஆர், இ.சி.ஆர், மேடவாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

You might also like More from author