செவ்வாய்க்கிரகத்தில் இன்சைட் விண்கலம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. மே 5-ம் தேதி ஏவப்பட்ட அந்த விண்கலம் சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணிக்கிறது.

 

 

இந்நிலையில், இன்சைட் விண்கலம் அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது. இந்த நிகழ்வு, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இது நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

செவ்வாய்க் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என நாசா தகவல் தெரிவித்து உள்ளது.

கியூரியாசிட்டி விண்கலத்தை அடுத்து இரண்டாவது விண்கலத்தை நாசா செவ்வாயில் தரையிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author