சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும் அவரின் மகனும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் 100 கோடி ரூபாய் வரை  வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குதாரர்களாக இருந்த வகையில் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
முன்னதாக வருமானத்தை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து  சோனியாவும் ராகுலும் சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சோனியா சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் ஆஜராகி,  வருமான வரித்துறை தவறான கணக்குகள் மூலம் 141 கோடி ரூபாய் வரை வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளது என்றார். இதுதொடர்பாக  ஒரு வாரத்துக்குள்  சோனியா, ராகுல் மற்றும் வருமான வரித்துறையினரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You might also like More from author