‘ஜிப்ஸி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ராஜுமுருகன் இயக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராஜுமுருகன், அதனைத் தொடர்ந்து ‘ஜோக்கர்’ படத்தை இயக்கினார். அரசியலை வெளிப்படையாக நையாண்டி செய்யும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

அரசியல் குறித்த விவாதத்தையும் இது ஏற்படுத்தியது. அதன்பிறகு, பாலா இயக்கும் ‘வர்மா’ படத்துக்கு வசனம் எழுதினார் ராஜு முருகன். ‘அர்ஜுன் ரெட்டி’யின் ரீமேக்கான இதில், விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய மூன்றாவது படத்தைத் தொடங்கியுள்ளார் ராஜுமுருகன். இந்தப் படத்துக்கு ‘ஜிப்ஸி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜீவா ஹீரோவாக நடிக்க, இமாச்சலப் பிரதேச அழகி நடாஷா சிங் ஹீரோயினாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் கிராஸ்டா எடிட் செய்கிறார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 

இதன் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், முதல்கட்ட படப்பிடிப்பு இன்று காரைக்காலில் தொடங்கியது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்க இருக்கிறது. ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து, ராஜுமுருகனின் இந்தப் படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like More from author