டெஸ்ட் தரவரிசை – முதலிடத்தை தக்கவைத்தது இந்தியா

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 116 புள்ளிகள் பெற்று முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
108 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும், 3-வது இடத்தில் நியூசிலாந்தும், 4-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 5-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் இடம்பிடித்துள்ளது எனதெரிவிக்கப்பட்டு உள்ளது

You might also like More from author