தங்கம் விலை பவுனுக்கு ரூ. 184 உயர்வு: நவராத்திரி, திருமண சீசன் எதிரொலி

நவராத்திரி மற்றும் திருமண சீசன் காரணமாக தங்கம் விலை இன்று பவுனுக்கு 184 ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது. இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்தது.

இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் சில நாட்களாக மீண்டும் ரூபாய் மதிப்பு அதலபாதளத்தில் சென்று வருகிறது. இதுபோலவே இந்திய பங்குச்சந்தைகளிலும் கடுமையான சரிவு காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 1000 புள்ளிகள் வரை சரிந்தன.

இதன் எதிரொலியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. நவராத்திரி சீசன் மற்றும் திருமணங்கள் காணமாகவும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்றைய விலையை ஒப்பிடுகையில் பவுனுக்கு ரூ.184 ரூபாய் உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 928 -க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் நேற்றைய விலையில் இருந்து 23 ரூபாய் அதிகரித்து ரூ2 ஆயிரத்து 991-க்கு விற்கப்படுகிறது.

You might also like More from author