தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்:: ஸ்டாலின்

உடனடியாக -அனைத்துக்-கட்சி -கூட்டத்தை-கூட்ட -வேண்டும்-ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ள நிலையில் நாளையே தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
  
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி வரைவு திட்டத்தை நீதிபதி மிஸ்ரா முன்னிலையில் தாக்கல் செய்தார். மேலும் இதுதொடர்பான வழக்கை 16ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வரைவு திட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நாளையே கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை தமிழக அரசு நாளையே கூட்ட வேண்டும். இந்த அனைத்துக் கட்சி கூட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதனை சட்ட ரீதியாக செயல்படுத்துவதை வலியுறுத்தும் வகையிலும் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

You might also like More from author