தமிழக அரசு தரப்பில் காவல் துறையினருக்கு அச்சுறுத்தல்: பொன்.ராதா

தமிழக அரசால் காவல்துறை மற்றும் அதிகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் மேலும் நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் -சென்னை எட்டு வழிச்சாலை பணியில் முதல்வர் பழனிசாமியின் முயற்சிக்கு பாராட்டுகள். இது போல் கிழக்கு கடற்கரை சாலை திட்டமும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கிழக்கு கடற்கரை ரயில் பாதை, குமரியில் துறைமுகம் துவங்குவதற்கான பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

2 ஆண்டுகளுக்கு மேல் 28 ஆயிரம் கோடி செலவில் வரவிருக்கும் குளச்சல் துறைமுகம் கொண்டு வராமல் இருப்பது வேதனையாக உள்ளது. தமிழக அரசு இதற்கான முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும். வதந்திகள் மூலம் பல திட்டங்களுக்கு தடை ஏற்படுகிறது. வதந்தி அடிப்படையில் செயல்பட்டால் அது மக்களை பாதிக்கும். ஜனநாயக புரட்டு ஏற்பட்டு பா.ஜ., ஆட்சி தமிழகத்தில் வர வாய்ப்பு உள்ளது.

திமுக அழிந்துவிடும் என திமுகவே நம்புகிறது. தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மக்கள் கழகங்களுக்கு ஓட்டு போட்டு ஏமாந்து நிற்கின்றனர். ஸ்டாலின் அவர்கள் பள்ளிக்கு கட் அடிப்பது போல் சட்டசபையை புறக்கணிக்கிறார். தமிழகத்தில் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

You might also like More from author