தமிழக பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு ரூ.10,550 கோடி ஒதுக்கீடு

2019 -20ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* பயிர் காப்பீட்டிற்கு ரூ.621 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* ரூ 84 கோடி மானியத்தில்  சூரிய சக்தியில் பம்பு செட்டுகளை இயக்க 90 சதவீத மானியம் வழங்குகிறோம். 10 குதிரை சக்திகள் வரை இயங்கும் 2000 சூரிய  மின்சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்.
* விவசாயத்துறைக்கு ரூ.10,550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நீர் சேமிப்பை அதிகரிக்க நுண்ணீர் பாசனத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும் 1361 கோடி செலவில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
* வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*  21.70 லட்சம் விவசாயிகள் பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
*  2019-20ம் நிதியாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் புதிய பகுதிகள், பயிர்கள் சேர்க்கப்படும்.
* ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற திடீர் பாதிப்புகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும். இத்திட்டத்திற்கான தமிழக காப்பீடு பங்குத்தொகையாக 621.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ள தடுப்பணை கட்டப்படும்.
* நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு.

You might also like More from author