தமிழ்நாடு நில அளவை அமைச்சு பணி ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு நில அளவை அமைச்சு பணி ஊழியர்கள் மாநில செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நடைபெற்றது இக் கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலாஜி தலைமை வகித்தார் அமைப்பு செயலாளர் முகமது ஷக்கீர் துவக்கவுரை நிகழ்த்தினார்.

 

இதில் இணை இயக்குனர் நிர்வாகம் பதவியினை உடனே பூர்த்தி செய்திட வேண்டும் என்றும் மாவட்ட அளவில் இளநிலை நிர்வாக அலுவலர் பதவி உடனே ஏற்படுத்த வேண்டும் என்றும் துறையில் ஆதிசேஷையா கமிட்டியின் ஆட்குறைப்பு நடவடிக்கை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் மாநில இணைச்செயலாளர் சுகுமாரன் நன்றி கூறினார்.

 

You might also like More from author