தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

மதுரை மாவட்ட தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தங்களுக்கு தினசரி சம்பளம்
ரூபாய் 380 வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி புதூர் தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழக அலுவலகம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தியும் கஜா புயலின் பாதிப்பின் போது நாங்கள் அனைவரின் வாழ்வில் ஒளியேற்றினோம் அதே போல் தமிழக அரசு எங்களது வாழ்விலும் ஒளியேற்ற வேண்டும் என்று கோஷம் போட்டு போராட்டம் நடத்தினர்
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்
இதில் ஒப்பந்த ஊழியர்கள் 100.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

You might also like More from author