தளபதி 63 படத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா யோகி பாபு – அசத்தல் அப்டேட் இதோ!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

மேலும் இப்படத்தில் விஜய் மகளிர் ஃபுட்பால் அணியின் கோச்சாக நடித்துவருவதாகம் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

ஆனால் விஜய் மட்டுமே இப்படத்தில் கோச்சாக நடிக்கவில்லையாம்.

விஜய்யுடன் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் கோச்சாக விஜய்யின் உதவியாளராக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யோகி பாபு சினிமாவிற்கு வருவதற்கு முன் ஃபுட்பால் பிளேயராக இருந்தவர் என்றும் தற்போதும் கால்பந்தாட்டத்தில் அவர் கெட்டிக்காரர் என்பதும் பலருக்கும் தெரியாத ஒரு தகவல்

You might also like More from author