திருச்சி சிவாவின் தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவை நிராகரித்தது

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா விதவை பெண்களின் நலன்களை பாதுக்காக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என தனிநபர் தீர்மானத்தை ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் மீது பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை மந்திரி விரேந்தர் குமார், விதவையர்களின் நல்வாழ்வை பேணிப்பாதுக்காக்க அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சில மாநிலங்களில் விதவையர்களுக்கான காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்களில் காப்பகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இதுதொடர்பாக தனியாக சட்டம் இயற்ற வேண்டியதில்லை. உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர்  தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும் என குறிப்பிட்டார்.
இதற்கு திருச்சி சிவா மறுத்து விட்டதால் அவர் தாக்கல் செய்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 23 உறுப்பினர்களும், எதிராக 35 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதைதொடர்ந்து அவர் தாக்கல் செய்த தனிநபர் தீர்மானத்தை மாநிலங்களவை நிராகரித்து விட்டது

You might also like More from author