திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் தங்க தேர் ரூ.3.50 லட்சத்தில் சீரமைக்கும் பணி

திருவண்ணாமலை, ஜன.9- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி பவனி வருவதற்காக மரத்தேர் எனப்படும் மகாரதம், வெள்ளி தேர் தங்கத் தேர் அகியவை பயன்படுத்தப்படுகிறது. தீபத்திருவிழாவில் மரத்தேர் வெள்ளித்தேர் பயன்படுத்தப்படும். ஆனால் தங்கத்தேர் மட்டும் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் விரும்பும் நாட்களில் நேர்த்திக்கடனாக இழுத்துச் செல்லும் சிறப்புக்குரியது. மகாரதம் மிகவும் பழமையானது. வெள்ளித்தேர் கடந்த 1907ஆம் ஆண்டு உருவானது. பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையையேற்று ரூ. 87 லட்சம் மதிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு உருவானது தங்கத்தேர். அதன் உயரம் 16 அடி ஆகும் கடந்த 16.03.2006 அன்று தங்கத்தேர் முதல் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்நிலையில் அண்ணாமலையார் கோவில் மகாகும்பாபிஷேக திருப்பணி காரணமாக 2015ஆம் ஆண்டு ஜனவரி ஜனவரி மாதத்திலிருந்து தங்கத் தேர் பவனி செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும் மீண்டும் தங்கத்தேர் பவனிவரும் என கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 6ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. எனவே தங்கத் தேரில் மீண்டும் சுவாமி வீதியுலா வரும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி ஒரே இடத்தில் தேர்நிலை நிறுத்தியிருந்ததால் அதன் உறுதி தன்மை பாதிக்கப்பட்டது. அதனால் தங்கத் தேரை பவனிக்கு பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டது. கொண்டுவர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சீரமைப்பு பணிக்கான உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அறநிலையத்துறைக்கு ஒப்புதலுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பிவைக்கப்பட்டது இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்றை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி உபயதாரரின் காணிக்கை மூலம் தற்போது 3.50 லட்சம் மதிப்பில் தங்க தேர் சீரமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதையட்டி தங்க தேர் சீரமைப்பு பணியை அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் ஞாயிறன்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறுகையில் தங்கத்தேர் தொடர்ந்து ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. தங்க தகடுகள் பொறுத்தப்பட்டுள்ள மரப்பலகைகள் தூண்கள் லேசாக சேதமடைந்துள்ளன. எனவே தங்க தகடுகளை அகற்றி மரத்தூண்கள் பலகைகளின் உறுதி தன்மை குறித்து மரசிற்பிகள் பரிசோதித்து மராமத்து பணியை மேற்கொள்ள உள்ளனர் உபயதாரர்கள் வழங்கிய நிதி மூலம் இப்பணிகள் நடைபெறும் உத்தேசமாக ரூ.3.50 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது இப்பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம்.

You might also like More from author